வேலூர் மாவட்டம் ஆம்பூர் வாத்திமனை பகுதியை சேர்ந்த ஓட்டல் உரிமையாளர் பைரோஸ் அகமது. இவரது மகள் பாத்திமா (வயது 13) பெயர் மாற்றபட்டுள்ளது. அதே பகுதியில் அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த 2 ஆண்டு காலமாக சக மாணவிகளுடன் அதே பகுதியை சேர்ந்த வாடகை ஆட்டோவில் பள்ளிக்கு சென்று வந்தார்.
இந்நிலையில் டிசம்பர் 11ந்தேதி காலை வழக்கமாக ஆட்டோவில் பள்ளிக்கு சென்ற மாணவியை அதே பகுதியில் உள்ள மற்றொரு ஆட்டோ டிரைவர் அர்ப்பான் மற்றும் அவரது நண்பர்கள் 4 பேர் பள்ளிக்கு அருகே காத்திருந்து மாணவியை காரில் ஏற்றிக்கொண்டு சென்றுள்ளனர். மகள் கார் ஏறி செல்வதை பார்த்த சிலர் இதுப்பற்றி அம்மாணவியின் தந்தைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அதிர்ச்சியான அவர் இதுகுறித்து மாணவியின் தந்தை பைரோஸ் அகமது ஆம்பூர் மகளீர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த டி.எஸ்.பி சச்சிதானந்தம் தலைமையிலான தனிப்படை போலீசார் கடத்தியது யார் என விசாரிக்க துவங்கினர்.
பெங்களூருக்கு சென்று அங்குள்ள தனியார் விடுதியில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதனை செல்போன் வழியாக கண்டறிந்த போலிஸார் உடனடியாக பெங்களுரூ விரைந்தனர். ஹோட்டல் அறையில் இருந்த மாணவியை மீட்டனர். மாணவியை கடத்திய பெங்களூர் பகுதியில் பதுங்கியிருந்த ஆட்டோ டிரைவர் அர்ப்பான், இர்பான்கான், முதாசீர் ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள தப்ரேஸ் மற்றும் ஷேபாஸ் ஆகிய இரண்டு பேரை போலீசார் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட மூவர் மீதும் போக்சோ சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
போலிஸ் தரப்பில், ஆட்டோ டிரைவரான அர்ப்பான் கடந்த ஆண்டு இதே போல் ஆம்பூரில் பிரபலமான வசதியான குடும்பத்தை சேர்ந்த இளம்பெண்ணை காதலிப்பதாக நாடகமாடி கல்யாணம் செய்துக்கலாம் என கடத்தி சென்றுள்ளான். இதேப்போல் ஒரு ஹோட்டல் அறையில் அந்த பெண்ணை தன்னுடன் வைத்துக்கொண்டு நண்பர்கள் மூலமாக அந்த பெண்ணின் குடும்பத்தாரிடம் 20 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டி வாங்கிக்கொண்டு விட்டுள்ளான் என்கிறார்கள்.
பள்ளி மாணவியை கடத்தி சென்று 5 பேர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் ஆம்பூர் பகுதியில் பெற்றோர்களிடையே பெரும் பயத்தை ஏற்படுத்தியுள்ளது.