நாடாளுமன்றத் தேர்தலில் தூத்துக்குடியில் போட்டியிட்ட கனிமொழி, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட வேட்பாளர்களை டெபாசிட்டை காலி செய்து பிரமாண்ட வெற்றியைப் பெற்றார். வெற்றி பெற்றதை அடுத்து வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க முதல் எம்.பி.யாக களமிறங்கினார் கனிமொழி. ஓட்டு கேட்கப் போகும் போது எப்படி ஒவ்வொரு பகுதியாகச் சென்றாரோ அதே போல அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.
இதனையடுத்து, கனிமொழி எம்.பி. தனது வெற்றிக்காக கடுமையாக உழைத்த திமுகவினருக்கு விருந்து கொடுத்து மகிழ்விக்க விரும்பினார். அதன்படி திமுக தொண்டர்களுக்கு இன்று தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியால் மஹாலில், சைவம் மற்றும் அசைவ விருந்து வழங்கினார். தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தலில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த விருந்து வழங்கப்பட்டது. விருந்தில் கலந்து கொண்ட அனைத்து நிர்வாகிகளுக்கும் இனிப்புகள் பரிமாறி, அவர்களின் நலம் விசாரித்தார்.
வயதான மூத்த பெண்மணிகள் சிலர், கனிமொழியிடம் கோரிக்கை மனுக்களும் கொடுத்தனர். சுமார் 8,000 பேர் இந்த விருந்தில் கலந்து கொண்டனர். அவர்களுடன் அமர்ந்து கனிமொழியும் சாப்பிட்டார். கனிமொழியின் விருந்து வைபவமும் உபசரிப்பும் கண்டு மிகுந்த உற்சாகமானர்கள். இந்த விருந்து வைபத்தில், தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளரும், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.