தமிழகம் ஜாக்டோ ஜியோ அமைப்பு மூலம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பல்வேறு போராட்டங்களை எட்டு நாட்களாக நடத்தினார்கள். அப்படியிருந்தும் இந்த எடப்பாடி அரசு அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்றித் தர ஆர்வம் காட்டாமல் மெத்தன போக்கையே கடைபிடித்து வந்தது. இதனால் டென்ஷன் அடைந்த ஜாக்டோ ஜியோ அமைப்பு போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி உள்ளது.
இந்த நிலையில் தான் திண்டுக்கல் மாவட்டத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்பு மூலம் போராட்டத்தில் சிறை சென்ற 43 இடைநிலை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது
.
கடந்த ஜனவரி 22ஆம் தேதி முதல் 8 தினங்கள் ஜாக்டோ ஜியோ அழைப்பின் பேரில் தமிழ்நாடு முழுவதும் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் நடைபெற்றது. இதனையடுத்து போராட்டத்தை ஒடுக்கும் வகையில் ஆசிரியர்களை தமிழக அரசு கைது செய்தது. திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் 43 ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டார்கள். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அமைப்பைச் சேர்ந்த அந்த 43 ஆசிரியர் களுக்கும் பாராட்டு விழா நடைபெற்றது.
இந்த இந்த விழாவிற்கு ஜாக்டோ ஜியோ வின் நிதி காப்பாளர்மோசஸ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் முபாரக் அலி வாழ்த்தி பேசினார். நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார் மாவட்ட செயலாளர் ஜேம்ஸ் மற்றும் துணைப் பொதுச் செயலாளர் கணேசன், மாநிலத் தலைவர் மணிமேகலை, மாநில செயற்குழு உறுப்பினர் வளர்மதி, மாவட்ட பொருளாளர் கிருஷ்ணவேணி, உள் பட மாவட்ட அளவில் உள்ள ஜாக்டோ ஜியோ அமைப்பினர் பலர் கலந்து கொண்டனர்.