Skip to main content

பாஜக நிர்வாகி கொலை; நீளும் விசாரணை - சிக்கிய ஊராட்சி மன்ற தலைவர்!

Published on 21/12/2024 | Edited on 21/12/2024
Investigation into  panchayat president in the BJP executive case

பாஜகவின் வேலூர் மாவட்ட ஆன்மீக ஆலய மேம்பாட்டு பிரிவு செயலாளராக விட்டல்குமார்(47) இருந்து வந்தார்.  இந்த நிலையில் கடந்த 16 ஆம் தேதி கே.வி.குப்பம் அடுத்த சென்னாகுப்பம் பகுதி சாலையோரத்தில் விட்டல்குமார் படுகாயங்களுடன் கிடந்துள்ளார். அதன்பின் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சம்பவம் தொடர்பாக சந்தேக மரணம் என கே.வி.குப்பம் போலீசார் வழக்குப் பதிவு செய்த நிலையில், விட்டல்குமார் கொலை செய்யப்பட்டிருப்பதாகவும் இறப்பில் சந்தேகம் உள்ளதாகவும், திமுக பிரமுகரான நாகல் ஊராட்சி மன்ற தலைவர் பாலா சேட் என்பவர் தான் கொலைக்கான காரணம் என பாஜகவினர் உடலை வாங்க மறுத்து வேலூர் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  சுமார் 9 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மாவட்ட எஸ்பி மதிவாணனிடம் நடத்திய பேச்சு வார்த்தையில், விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்பி உறுதி அளித்ததற்கு பிறகு விட்டல் குமார் உடலை வாங்கிச் சென்று அடக்கம் செய்தனர்.மேலும் சந்தேக மரணம் என்ற பிரிவை கொலை வழக்காக கே.வி.குப்பம் காவல்துறையினர் மாற்றினர். 

Investigation into  panchayat president in the BJP executive case

இந்நிலையில், பாலா சேட் மகனின் ஓட்டுநர் சந்தோஷ்(26) மற்றும் கமலதாசன் (24) ஆகிய இருவர் இன்று காட்பாடி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். பின்னர் இருவரையும் ஜனவரி 2ஆம் தேதி வரை 14 நாட்களுக்கு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி ஜெயகணேஷ் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து இருவரையும் போலீசார் வேலூர் மத்தியச் சிறையில் அடைத்தனர். இதனைத் தொடர்ந்து குற்றச்சாட்டுக்குள்ளான நாகல் ஊராட்சி மன்ற தலைவர் பாலா சேட் மற்றும் அவரது மகன் ஆகிய இருவரை போலீசார் பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்