தமிழகத்தில் மக்களவை மற்றும் இடைத்தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பணம் , பரிசு பொருட்கள் விநியோகம் செய்ய அரசியல் கட்சிகள் முற்பட்டாலோ , அதற்கான பதுக்கல் வேலைகளில் ஈடுப்பட்டாலோ, அது பற்றி புகார் அளிக்க சென்னை வருமான துறை 24 மணி நேர கட்டுபாட்டு அறையை துவக்கி உள்ளது. இதன் படி வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுத்தால் சென்னை வருமான வரித்துறை மற்றும் புலனாய்வு பிரிவு புகார் அளிக்கலாம்.
இதற்கான தொலைபேசி எண் : 1800-425-6669 , வாட்ஸ் ஆப் எண் : 94454-67707 , FAX No : 044-28262357 , ஈ-மெயில் : itcontrol.chn@gov.in உள்ளிட்ட எதாவது ஒரு முறையில் புகார் அளிக்கலாம் என சென்னை வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. மேலும் புகார் அளிப்பவரின் ரகசியம் காக்கப்படும் என தெரிவித்துள்ளது. முதன் முறையாக இந்திய தேர்தல் ஆணையத்துடன் சென்னை வருமான வரித்துறை இணைந்து பணியாற்றுவது குறிப்பிடத்தக்கது.
பி. சந்தோஷ் , சேலம்