
காஞ்சிபுரத்தில் வேலைதேடி வந்த இளம்பெண்ணை 4 பேர் கொண்ட கும்பல் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெரிய காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 20 வயது பெண் ஒருவர் வேலை தேடி வந்துள்ளார். அந்த பெண்ணிடம் முன்பின் தெரியாத குணசீலன் என்பவர் அறிமுகமாகி வேலை வாங்கித் தருவதாகத் தெரிவித்துள்ளார். வேலை தயாராக இருப்பதாகவும் அந்த நிறுவனத்திற்கு நேரில் சென்றால்தான் வேலை உறுதியாகும் எனக் கூறியதால் கடந்த ஒன்றாம் தேதி குணசீலனை நம்பி அந்த இளம்பெண் காரில் சென்றுள்ளார். செல்லும் வழியில் குணசீலனின் நண்பர்கள் குணசேகரன், காமராஜ், ஜெபநேசன் ஆகியோர் காரில் ஏறியுள்ளனர். அப்பொழுது அந்த பெண்ணிற்குக் குளிர்பானம் கொடுத்துள்ளனர். அதில் மயக்க மருந்து கலந்தது தெரியாமல் இளம்பெண்ணும் அந்த குளிர்பானத்தைக் குடித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து மயக்கமடைந்த அந்த பெண்ணை ஐந்து பேரும் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளனர். தனக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை தொடர்பாகப் பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர். வேலைதேடி வந்த இளம்பெண் குளிர்பானத்தில் மயக்கமருந்து கொடுத்துக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அறிமுகம் இல்லாத நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளனர்.