விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் நீதிமன்றம் மற்றும் காவல்துறையை அவதூறாக பேசியது தொடர்பாக நேரில் ஆஜராகி பதிலளிக்க வேண்டும்மென்ற நீதிமன்ற உத்தரவிற்கு, தானாக முன்வந்து உயர்நீதிமன்றம் விசாரிக்க சிடி.செல்வம் அமர்வுக்கு அதிகாரம் இல்லை என எச்.ராஜா எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை எச்.ராஜா நேரில் சந்தித்தார்.
அண்மையில் விநாயகர் சதுர்த்தி ஊரவலத்தில் நீதிமன்றம் மற்றும் காவல்துறையை அவதூறாக பேசியது தொடர்பாக பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா மீது கண்டனங்கள் குவிந்து வந்தது. மேலும் அவர் மீது 8 பிரிவுகளில் வழக்குகள் போடப்பட்ட நிலையில் நீதிமன்றமே தானாக முன்வந்து வழக்கு தொடுத்து விசாரிக்கவேண்டும் என்ற கோரிக்கை நிலவ, சிடி.செல்வம் மற்றும் நிர்மல் குமார் அமர்வு எச்.ராஜாவின் செய்லபாடு குறித்து நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுப்பதாகவும், வரும் அக்டோபர் 20-க்குள் எச்.ராஜா நேரில் ஆஜராகி இதுதொடர்பாக பதிலளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்கள். அதேபோல் அரசு தலைமை வழக்கறிஞரும் அக்டோபர் 3-ஆம் தேதிக்குள் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இந்நிலையில் தானகுக்கு எதிராக டூமோட்டோ வழக்கு எடுக்க தலைமை நீதிபதிதான் எடுக்கவேண்டும் தவிர சிடி.செல்வம் நிர்மல்குமார் அமர்வுக்கு அதிகாரம் இல்லை எனவே இதை தலைமை நீதிபதி கருத்தில் கொள்ளவேண்டும் என எச்.ராஜா தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதனை அடுத்து இன்று நண்பகல் கிண்டியிலுள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா நேரில் சந்தித்தார். சுமார் அரை மணிநேரம் நடைபெற்ற இந்த சந்திப்பின் நோக்கம் என்ன என எந்த தகவலும் வெளியாகவில்லை.