பெரம்பலூரில் பாஜக - விசிக மோதல்!
பெரம்பலூரில் திருமாவளவனை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினருடன் விசிகவினர் தகராறு செய்து சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பெரம்பலூரில் விசிக தலைவர் திருமாவளவனைக் கண்டித்து பாஜகவினர், அக்கட்சியின் எஸ்சி அணி மாவட்ட தலைவர் சுரேஷ்குமார் தலைமையில் புது பஸ் ஸ்டாண்டில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் விசிக மாவட்டச் செயலாளர் தமிழ்மாணிக்கம், மாநில செயலாளர் வீரசெங்கோலன், செய்தி தொடர்பாளர் உதயகுமார் உள்ளிட்ட 15பேர் அங்குவந்து ஆர்ப்பாட்டதைக் கைவிடக் கோரியும், திருமாவளவன் குறித்து அவதூறாகப் பேசுவதை நிறுத்தக்கோரியும் கோஷமிட்டனர்.
இதனால் இருதரப்பினரிடையே கைகலப்பு ஏற்படும் சூழல் ஏற்பட்டது. ஏடிஎஸ்பி ஞானசிவக்குமார், டிஎஸ்பி கார்த்திக், இன்ஸ்பெக்டர் தேவராஜ் உள்ளிட்ட போலீசார் அங்கு வந்து விசிக வினரை அப்புறப்படுத்தினர். அங்கிருந்து கோஷமிட்டவாறு சென்ற விசிக-வினர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து தமிழ்மாணிக்கம், வீரசெங்கோலன் உள்ளிட்ட 9 பேரை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
-எஸ்.பி.சேகர்