Skip to main content

"வக்ஃபு வாரியம் ஒருதலைபட்சமாக செயல்படக் கூடாது" - உயர்நீதிமன்றம் அறிவுரை

Published on 03/11/2022 | Edited on 03/11/2022

 

high court said Waqf Board should not be done unilaterally

 

திருவாரூரை அடுத்துள்ள கொடிக்கால் பாளையம், மொஹிதீன் ஆண்டவர் பள்ளிவாசலுக்கு தேர்தல் நடத்துவது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. 

 

ஜமாத்தார்கள் இடையே நிர்வாகக் குழுவினர்களுக்கான தேர்தல் நடைபெற்றது. இது தொடர்பான தகவல் உரிய முறையில் வக்ஃபு வாரியத்திற்கு  தெரிவிக்கப்பட்டது. ஆனால் தேர்தல் முறையாக நடத்தவில்லை என்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் நிர்வாகம் செய்யக் கூடாது என்றும் வக்ஃபு வாரியம் தடை விதித்தது.

 

இதனையடுத்து, இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி சி.சரவணன், வக்ஃபு வாரியம் ஒருதலைபட்சமாக செயல்படக் கூடாது. வக்ஃபு வாரியம் நடுநிலையாக மட்டுமே செயல்பட வேண்டும். மேலும், முறையாக நடைபெற்ற தேர்தலில் தலையிட எவ்வித அதிகாரமும் வக்ஃபு வாரியத்திற்கு இல்லை. வக்ஃபு வாரியம் கண்காணிக்க மட்டுமே அனுமதி உள்ளது எனக் கருத்து தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்