ஈரோடு அருகே தனியார் பேருந்தும் அரசுப் பேருந்தும் நேருக்கு நேர் மோதியதால் 18க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஈரோட்டில் இருந்து கரூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தும் அதேபோல் நடுப்பாளையத்தில் இருந்து ஈரோடு பேருந்து நிலையம் நோக்கிச் சென்று கொண்டிருந்த அரசு நகரப் பேருந்தும் சோலார் புதூர் என்ற பகுதியில் நேருக்கு நேர் மோதிக் கொண்டது. இந்த விபத்தில் இரண்டு பேருந்து ஓட்டுநர்கள், பயணிகள் என மொத்தம் 18 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
விபத்து குறித்து தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு 108 ஆம்புலன்ஸ்கள் கொண்டுவரப்பட்டது. ஈரோடு அக்கரகாரம், சூளைமேடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த ஆம்புலன்ஸ்கள் மூலமாக காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து தகவலறிந்து அங்கு வந்த மொடக்குறிச்சி போலீசார் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்து தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.