Published on 15/09/2020 | Edited on 15/09/2020

கரோனா தொற்று காரணமாக போதிய இடவசதிகள் இல்லாததால் சென்னை கோட்டையில் நடைபெற வேண்டிய சட்டசபை கூட்டம் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள கலைவாணர் அரங்கிற்கு தற்காலிகமாக மாற்றப்பட்டு நேற்று சட்டமன்றம் கூடியது.
இன்று இரண்டாம் நாளாக சட்டமன்ற கூட்டம் நடந்துவரும் நிலையில், இன்றையை கூட்டத்தொடரில் நீட் தேர்வால் மன உளைச்சலில் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது தொடர்பாக திமுக தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.
நீட் கவன ஈர்ப்பு தீர்மானத்தின் விவாதத்தின் பின் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், கரோனாவை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசு தோல்வியடைந்துவிட்டது. பொருளாதாரம் படுமோசம் அடைந்து விட்டதால் வெள்ளை அறிக்கை விட வேண்டும், ஒவ்வொரு குடும்பத்துக்கும் தமிழக அரசு 5 ஆயிரம் ரூபாய் அளிக்க வேண்டும் என பேசினார்.