புதுக்கோட்டை முன்னாள் அ.தி.மு.க எம்.பியும், முன்னாள் அ.தி.மு.க மா.செ வுமான ராஜா.பரமசிவம் தற்போது தீபா பேரவையில் உள்ளார். உடல்நலக்குறைவால் நேற்று சென்னையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் சொந்த ஊரன நெடுவாசல் மேற்கு குருவாடி கிராமத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அங்கு பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்களும் அஞ்சலி செலுத்தினார்கள்.
தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் நெடுவாசல் குருவாடியில் முன்னாள் எம்.பி. ராஜா.பரமசிவம் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பிறகு செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது..
ராஜா.பரமசிவம் மிகவும் பின்தங்கிய குடும்பத்தில் பிறந்து அ.தி.மு.க வில் எம்.பி.யாக, மாவட்டச் செயலாளராக சிறப்பாக பணியாற்றினார். அவரது இறப்பு புதுக்கோட்டை மாவட்ட மக்களுக்கு இழப்பாக உள்ளது என்றார்.
மேலும் ஹைட்ரோ கார்ப்பன் போன்ற விளை நிலங்களை நாசமாக்கும், விவசாயிகளை அழிக்கும் திட்டம், குடிதண்ணீரை மாசுபடுத்தும் எந்த திட்டத்தையும் விவசாயிகளிடையே திணிக்க கூடாது. இது பொன்ற நாசகார திட்டங்களை அனுமதிக்க கூடாது என்பதை வலியுறுத்துவோம் என்றார்.
தொடர்ந்து கமலின் பேச்சு குறித்தும் தமிழிசை பேச்சு குறித்தும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது.. மதுரைக்கு இடைத்தேர்தல் தொகுதிக்கு செல்கிறேன் அங்கே இந்த கேள்விகளுக்கு பதில் சொல்கிறேன் என்று கிளம்பினார். நெடுவாசலில் கேள்வி கேட்ட மதுரை பதில் சொல்றேன்னு சொல்லிட்டுப் போறாரே என்று முனுமுனுத்தனர் அங்கு நின்றவர்கள்.