Skip to main content

திருச்சி - 4 பேரக்குழந்தைகள் உள்ள பெண் 11வது பிரசவத்திற்காக முதல் முறையாக ம.மனையில் அனுமதி

Published on 26/10/2018 | Edited on 26/10/2018


 

Musiri

 

4 பேரக்குழந்தைகள் உள்ள பெண் 11வது பிரசவத்திற்காக முதல் முறையாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 

திருச்சி மாவட்டம், முசிறியைச் சேர்ந்தவர் கண்ணன். இவருக்கு வயது 48. இவருக்கு சாந்தி என்ற மனைவி (வயது 45) உள்ளார். இவர்களுக்கு 11 குழந்தைகள் உள்ளனர். இதில் ஒரு பிரசவத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்தன. சீதா, கீதா (20), கார்த்திக் (19), உதயகுமாரி (17), தர்மராஜ் (16), சுபலட்சுமி (13), கிருத்திஸ்கா (11), தீப்தி (9), தீபக் (9),  ரிட்டிஸ் கண்ணன் (7), பூஜா (5) ஆகிய 11 குழந்தைகள் உள்ளனர். 
 

இவர்களில்  சீதாவுக்கு திருமணமாகி உடல்நலக்குறைவு காரணமாக இறந்துவிட்டார். தீப்தி, ரிட்டிஸ் கண்ணனும் உடல் நலக்குறைவால் இறந்துவிட்டனர். தற்போது 8 குழந்தைகளுடன் வசித்து வருகின்றனர். யாருடைய துணையும் இல்லாமல் மனைவியின் பிரவத்தை இதுவரை கண்ணன் தனது வீட்டிலேயே பார்த்துள்ளார். இதுவரை அவர் மருத்துவமனைக்கு சென்றது இல்லை. 
 

இந்த நிலையில் சாந்தி தற்போது மீண்டும் கர்ப்பமுற்றார். இதனை அறிந்த சுகாதார செவிலியர்கள் மருத்துவமனைக்கு வருமாறு அழைத்துள்ளனர். சாந்தி மறுத்துள்ளார். நிறைமாத கர்ப்பிணியான சாந்தி மருத்துவமனைக்கு வர மறுப்பதாக அவர்கள் உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளனர். 
 

உயர் அதிகாரிகளான உஷாராணி, கார்த்திக், கீதா, ஆகியோர் முசிறிக்கு சாந்தியை சந்திப்பதற்காக சென்றனர். தகவல் அறிந்த சாந்தி, அதிகாரிகள் வருவதை அறிந்து ஆற்றங்கரையில் ஒளிந்து கொண்டார். 
 

இதையடுத்து முசிறி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சாந்தியை தேடி கண்டுபிடித்து அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அப்போது அதிகாரிகள் அறிவுரை கூறியதையடுத்து மருத்துவமனைக்கு வருவதாக ஒப்புக்கொண்டார். இதையடுத்து அதிகாரிகளின் காரிலேயே அரசு மருத்துவமனைக்கு சென்றார்.
 

மருத்துவமனையில் இருப்பதை அறிந்து மருத்துவமனைக்கு வந்த கண்ணன், தனக்கு 4 பேரக்குழந்தைகள் உள்ள நிலையில் குடும்ப கட்டுப்பாடு செய்து கொள்ளுமாறு பலமுறை அறிவுரை கூறியும், அதனை ஏற்க சாந்தி மறுத்துவிட்டார் என தெரிவித்தார். 
 

 

 

 

சார்ந்த செய்திகள்