Skip to main content

மீன்வளப் பல்கலைக்கழகம் நாகையிலேயே நீடிக்கும்: தமிமுன் அன்சாரி

Published on 04/12/2017 | Edited on 04/12/2017
மீன்வளப் பல்கலைக்கழகம் நாகையிலேயே நீடிக்கும்: தமிமுன் அன்சாரி



மீன்வளப் பல்கலைக்கழகம் நாகையிலேயே நீடிக்கும் என நாகப்பட்டிணம் எம்எல்ஏவும், மனிதநேய ஜனநாயகக் கட்சியின் பொதுச்செயலாளருமான தமிமுன் அன்சாரி கூறியுள்ளார். 

கடந்த ஆட்சியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் நாகப்பட்டினம், பனங்குடியில் அமைக்கப்பட்ட மீன்வளப் பல்கலைக்கழகம் இம்மாவட்டத்திற்கு சிறப்பு சேர்க்க கூடியதாக இருக்கிறது. இப்பல்கலைக்கழகம் அமைய முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயபால் பெரும் முயற்சி எடுத்தார்.



இந்நிலையில், பல்கலைக்கழகத்தை சென்னைக்கு இடமாற்றம் செய்ய முயற்சிகள் நடப்பதாக செய்திகள் வந்தது. கடந்த 02.11.17 அன்று இதுகுறித்து தமிழக முதல்வருக்கு விரிவாக கடிதம் எழுதினேன். இடமாற்றம் என்ற செய்தி உண்மையாக இருந்தால் அந்த முயற்சியை கைவிடுமாறு அக்கடிதத்தில் கேட்டு கொண்டேன்.

 அதுபோல கடந்த 29.11.17 அன்று மீன்வளப் பல்கலைக்கழக துணை வேந்தருக்கும் இதே போன்று கடிதம் எழுதி இருந்தேன். 

அமைச்சர் ஓ.எஸ்.மணியனை சந்தித்து இதுகுறித்து நான் கேட்டபோது, அப்படி ஒரு திட்டம் ஏதுமில்லை என்று உறுதியாக மறுத்துவிட்டார்.

 எனவே, இதுகுறித்து யாரும் அச்சப்பட வேண்டாம் என்றும், அப்படி ஒரு முயற்சி நடைப்பெறுமேயானால் அதை முறியடிக்க கடைசிவரை போராடுவேன் என இதன் மூலம் தெரிவித்து கொள்கிறேன் என கூறியுள்ளார். 

சார்ந்த செய்திகள்