Skip to main content

இடி தாக்கி மீனவர் உயிரிழப்பு

Published on 13/08/2017 | Edited on 13/08/2017

இடி தாக்கி மீனவர் உயிரிழப்பு

கடலூர் மாவட்டம்  பரங்கிப்பேட்டை அருகே உள்ள  பூ.மானம்பாடியை சேர்ந்தவர் சங்கர் ( 50), மீனவர். இவர் நேற்று முன்தினம்  இரவு பைபர் படகில் பூ.மாணம்பாடி வெள்ளாற்றின் முகத் துவாரத்தில் மீன் பிடிக்க சென்றுள்ளார்.  அப்போது  அப்பகுதியில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இந்த நிலையில் வெள்ளாற்றின் முக துவாரத்தில் மீன் பிடித்து கொண்டிருந்த சங்கரின் பைபர் படகில் இடி தாக்கியது. இதில் அவர் அதே இடத்தில் உடல் கருகி உயிரிழந்தார். இது குறித்த தகவல் அறிந்த பரங்கிப்பேட்டை போலீஸார் நேற்ற அதிகாலை சம்பவ இடம் சென்று வெள்ளாற்றின் முகத்துவாரத்தில் உயிரிழந்து கிடந்த சங்கரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பரங்கிப்பேட்டை அரசு  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும்  இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

- காளிதாஸ்

சார்ந்த செய்திகள்