தமிழகத்தில் தேர்தல் பறக்கும் படையினர் அனைத்து மாவட்டங்களிலும் தொடர்ந்து அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகப்பட்ச பணம் ரூபாய் 108.75 கோடியை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் தமிழகத்தில் நேற்று வரை (01/04/2019)பறிமுதல் செய்யப்பட்ட ரொக்க பணம் , தங்கம் , வெள்ளி பொருட்கள் உள்ளிட்டவற்றின் மொத்த மதிப்பு சுமார் ரூபாய் 208.55 கோடி ஆக உள்ளது.
அதனை தொடர்ந்து இந்தியாவிலேயே அதிக பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட மாநிலமாக ரூபாய் 509.92 கோடியுடன் குஜராத் மாநிலம் முதலிடம் வகிக்கிறது. அதே போல் இந்தியா முழுவதிலும் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் பொருட்களின் மதிப்பு ரூபாய் 1460.02 கோடி ஆக உள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் தினமும் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் பணம் மதிப்பு தொடர்பான விவரங்களை தினமும் தேர்தல் ஆணைய இணைய பக்கத்தில் வெளியிட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று தமிழகம் வருகிறார். அதனை தொடர்ந்து அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை செய்யவுள்ளார். இதில் பறக்கும் படையினர் எண்ணிக்கை அதிகரித்தல் மற்றும் தேர்தல் கண்காணிப்பை தீவிரப்படுத்துவது தொடர்பான முக்கிய முடிவை தேர்தல் ஆணையம் எடுக்க அதிக வாய்ப்பு உள்ளது.
பி.சந்தோஷ் , சேலம் .