எடப்பாடி அரசு பதவி விலக கோரி மறியல்: தா.பாண்டியன் கைது
எடப்பாடி அரசு பதவி விலக கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நடந்த மறியல் போராட்டத்தில் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் கைது செய்யப்பட்டார்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பதவி விலக வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் இன்று மறியல் போராட்டம் நடந்தது. கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் போராட்டத்துக்கு தலைமை தாங்கினார். போராட்டம் நடத்த போலீசார் அனுமதி தரவில்லை. இருந்தும் அவர்கள் தடையை மீறி மறியலில் ஈடுபட்டனர். எனவே தா.பாண்டியன் உள்பட 50 பேரை போலீசார் கைது செய்து வேனில் அழைத்து சென்றனர்.
படங்கள்: அசோக்குமார்