நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திண்டுக்கல் மாநகராட்சியில் உள்ள 48 வார்டுகளில் திமுக 37 வார்டுகளிலும், அதன் கூட்டணி கட்சிகள் 11 வார்டுகளிலும் களமிறங்கியது. அதுபோல் அதிமுக 48 வார்டுகளில் ஆளுங்கட்சியை எதிர்த்து போட்டி போட்டது.
இந்த நிலையில், கடந்த 19ஆம் தேதி நடந்த வாக்குப்பதிவு எண்ணிக்கை திண்டுக்கல் மாநகரில் உள்ள அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் எண்ணப்பட்டு வருகிறது. இதில், முதல் ரவுண்டில் 14 வார்டுகள் எண்ணப்பட்டன. அதில், திமுக 10 வார்டுகளை முன்னிலையில் உள்ளது. அதுபோல் கூட்டணிக் கட்சியான சி.பி.எம். 2-வார்டுகளில் முன்னிலையில் உள்ளது.
மீதமுள்ள 2 வார்டுகளில் 4வது வார்டில் போட்டியிட்ட முன்னாள் வனத்துறை அமைச்சர் சீனிவாசனின் மகன் ராஜ்மோகன், முன்னிலையில் இருந்துவருகிறார். 14வது வார்டில் பாஜக வேட்பாளர் தனபால் முன்னிலையில் உள்ளது. இப்படி 14 வார்டுகளில் நடந்த வாக்கு எண்ணிக்கையில் திமுக கூட்டணி 12 வார்டுகளிலும், அதிமுக, பாஜக தலா ஒருவார்டிலும் முன்னிலையில் உள்ளது. இதில் பெரும்பாலான வார்டுகளில் எதிர்க்கட்சியான அதிமுக டெபாசிட் இழந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.