திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டியில் அகில இந்திய பிரமலைக்கள்ளர் கூட்டமைப்பு மற்றும் கல்வியியல் அறக்கட்டளை சார்பாக தேவர் ஜெயந்தி விழா நடைபெற்றது. முன்னதாக நிர்வாகிகள் சார்பாக தேவர்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பசும்பொன்னில் தேவர்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்பு திமுக மாநில துணை பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி மதியம் 3 மணியளவில் சின்னாளபட்டியில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வந்தார்.
அப்போது அகில இந்திய பிரமலைக்கள்ளர் கூட்டமைப்பு மற்றும் கல்வியியல் அறக்கட்டளை நிர்வாகிகள் சார்பாக அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அன்னதானம் நடைபெற்ற பகுதிக்கு சென்று பார்வையிட்ட பின்பு பொதுமக்கள் மத்தியில் பேசிய ஐ.பெரியசாமி தேசியமும், தெய்வீகமும் ஒருங்கே இருந்து வாழ்ந்த பசும்பொன் தேவர் திருமகனார் அனைத்து சமுதாய மக்களையும் அரவணைத்துச் சென்றார். தென் தமிழகத்தில் அரசியலில் முக்கய பங்காற்றிய தேசிய தலைவர்களில் தேவர் திருமகனாரும் ஒன்று என்றார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் பிள்ளையார் நத்தம் முருகேசன், பாறைப்பட்டி ராமன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பாஸ்கரன், மாவட்ட கவுன்சிலர் ராஜகணேஷ், சின்னாளபட்டி முன்னாள் நகரச் செயலாளர்கள் தி.சு.அறிவழகன், பாலகிருஷ்ணன், அகில இந்திய பிரமலைக்கள்ளர் கூட்டமைப்பு மற்றும் கல்வியியல் அறக்கட்டளை நிறுவனர் ஓ.வினோத், மாநில தலைவர் சந்தோஷ், மாநில துணைத்தலைவர் ரவிக்குமார், மாநில இணை பொருளாளர் ஏ.ஜி.கலையரசன், மாநில துணை செயலாளர் எம்.பாண்டியராஜன், மாநில துணை பொருளாளர் வி.வைரமுத்து மற்றும் வடக்குத்தெருவை சேர்ந்த திமுக நிர்வாகிகள் வார்டு செயலாளர் முருகன், செந்தீபன், ஓ.பாக்கியராஜ், மணிமாறன், உட்பட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.