எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் - உயர்நீதிமன்றத்தில் மனு!
டிடிவி ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
எம்.எல்.ஏக்கள் 18பேரின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அந்த மனுவில், பதவி பறிப்பை ரத்து செய்ய வேண்டும் என்றும், எவ்வித விதி மீறலிலும் ஈடுபடவில்லை என்றும் எம்.எல்.ஏக்கள் விளக்கம் அளித்துள்ளனர். இதையடுத்து வரும் செப்டம்பர் 20ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. இதனை தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களில் ஒருவரான வெற்றிவேல் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
படம்: அசோக்குமார்