Skip to main content

தனியாக இருந்த மருத்துவர்; கொள்ளையர்கள் துணிகரம்

Published on 15/04/2023 | Edited on 15/04/2023

 

dindigul palani gh chief doctor udhayakumar incident

 

திண்டுக்கல் மாவட்டம் பழனி அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் உதயகுமார் (வயது 55). இவர் பழனி அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவராகப் பணியாற்றி வருகிறார். இவரது மகள் ஸ்ரீநிதி மதுரையில் உள்ள மருத்துவக் கல்லூரி ஒன்றில் இறுதி ஆண்டு மருத்துவம் படித்து வருகிறார். தனது மகளைப் பார்த்து விட்டு வருவதற்காக உதயகுமார் மனைவி ரேவதி கடந்த 2 நாட்களுக்கு மதுரை சென்றுள்ளார்.

 

இந்நிலையில் உதயகுமார் மட்டும் தனியாக வீட்டில் இருந்துள்ளார். நேற்று அதிகாலை 2 மணியளவில் தனது மருத்துவப் பணியை  முடித்துவிட்டு வீட்டிற்கு வந்த உதயகுமார், வீட்டைப் பூட்டி விட்டுத் தூங்கியுள்ளார். இவர் தூங்கிய சிறிது நேரத்தில் முகமூடி அணிந்த 3 நபர்கள் உதயகுமாரின் வீட்டில் நுழைந்து உதயகுமாரை எழுப்பி கத்தி உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்களால் கொடூரமாகத் தாக்கியதுடன் அங்கிருந்த சேரில் அவரைக் கட்டிப் போட்டுள்ளனர்.

 

அதன்பிறகு அந்த கும்பல் பீரோக்களில் இருந்த 100 சவரன் தங்க நகைகள் மற்றும் 20 லட்ச ரூபாய் ரொக்கப் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு உதயகுமாரை சேரில் இருந்து அவிழ்த்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். உடலில் காயங்களுடன் தடுமாறிய நிலையில் வீட்டை விட்டு வெளியே வந்த உதயகுமார், அவ்வழியாக வந்தவர்களிடம் உதவி கேட்டு அவர்கள் மூலமாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பழனி போலீசார், உதயகுமாரை மீட்டு சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக அவரை மதுரை அரசு மருத்துவமனைக்கு மருத்துவர்கள் அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக தனிப்படை அமைத்து கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்