Skip to main content

திண்டுக்கல் மாவட்ட காங்கிரஸ் தலைமையை மாற்றக்கோரி புகார்மனு!! செயலற்று கிடப்பதாக குற்றச்சாட்டு !!

Published on 05/07/2018 | Edited on 05/07/2018

 

congress1

 

 

 

திண்டுக்கல் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் கிழக்கு மேற்கு என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு மாவட்ட தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

இதில் கிழக்கு மாவட்டம் கட்டுப்பாட்டில் ஆத்தூர்,நத்தம், நிலக்கோட்டை  என மூன்று சட்டமன்ற தொகுதிகள்  அடக்கம். அப்படிப்பட்ட இந்த மாவட்டத்திற்கு கொடைக்கானலில் உள்ள அப்துல்  கணிராஜாவை தலைமை நியமித்து இருக்கிறது. ஆனால் இந்த அப்துல்கணிராஜா குடியிருப்பதோ மேற்கு மாவட்டம் எனவே கட்சி செயல்பாடுகள் எதுவும் இல்லாமல் பெயர் அளவில் மாவட்ட தலைவர் பதவியை வாங்கிவைத்துக்கொண்டு கொடைக்கானலிலேயே இருந்து வருகிறார். 

 

congress1

 

இதனால்  கடந்த  மூன்று வருடங்களாக  எந்த  ஒரு கட்சிக்கூட்டமோ,கட்சி கொடி ஏற்றுவிழாவோ நடக்காமல் கிழக்கு மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியினரை தேடிப்பிடிக்க வேண்டிய நிலையில் கட்சி இருந்து வந்தது.  இதனால் அதிர்ச்சியடைந்த இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் கிழக்கு மாவட்டத்திற்கு கிழக்கு மாவட்ட தொகுதியில் இருக்கும் கட்சிகாரர்களை தலைவராக போடவேண்டும் தற்பொழுது  மேற்கு மாவட்டத்தில் குடியிருக்கும் அப்துல் கணிராஜாவை மாற்ற வேண்டும் என கண்டன போஸ்டர் அடித்து மாவட்டம் முழுவதும் ஒட்டி வருகிறார்கள். 

 

அதோடு மட்டுமல்லாமல் திண்டுக்கல் மாநகர இளைஞர் காங்கிரஸ் தலைவர் மணிகண்டன் தலைமையில் நத்தம் கோபால்பட்டியில் இளைஞர் காங்கிரஸ்  சார்பில் கூட்டம் போட்டு மாநில தலைவர் திருநாவுக்கரசு மற்றும்  ராகுல் காந்தி வரை  அப்துல் கணிராஜாவை உடனடியாக மாற்றவேண்டும் என புகார் மனுக்கள் அனுப்பி இருக்கிறார்கள். இதனால் இந்த விவகாரம் மாவட்ட அளவில் கதர்சட்டைகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சார்ந்த செய்திகள்