Skip to main content

அ.தி.மு.க. ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் முன்பு அடிதடி - நாற்காலிகள் பறந்தன!

Published on 13/11/2018 | Edited on 13/11/2018
d

 

     பாராளுமன்ற தேர்தல் வருவதையொட்டி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள திண்டுக்கல், பழனி, ஆத்தூர், நிலக்கோட்டை, ஒட்டன்சத்திரம், நத்தம், வேடசந்தூர் உட்பட 7 சட்டமன்ற தொகுதிகளுக்கான பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திண்டுக்கல்-நத்தம் ரோட்டில் உள்ள டிஎஸ்எல் மஹாலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு திண்டுக்கல் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வெ.மருதராஜ் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன், முன்னாள் அமைச்சரும், கழக அமைப்புச் செயலாளருமான நத்தம் இரா.விசுவநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தை ஆத்தூர் ஒன்றிய அண்ணா தி.மு.க. செயலாளர் பி.கே.டி.நடராஜன் வரவேற்று துவக்கி வைத்தார். கூட்டத்திற்கு தலைமை தாங்கி பேசிய மாவட்ட செயலாளர் மருதராஜ் ஏழு சட்டமன்ற தொகுதிகளில் நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு ஏற்கனவே பூத் கமிட்டி நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு தேர்தல் பணி பம்பரம் போல் செயல்பட்டு வருகிறது. மீதமுள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளுக்கு பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. 

 

d

 

அ.தி.மு.க. தொண்டர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் இருந்து தேர்தல் பணியாற்ற வேண்டும் என்று பேசிக் கொண்டிருந்த போது, திமுதிமுவென தொப்பம்பட்டியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான அ.தி.மு.க. தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டத்தின் நடுவே சென்று பேசிக் கொண்டிருந்த மாவட்;டச் செயலாளர் மருதராஜை பார்த்து கூட்டத்தை நிறுத்துய்யா என்று சத்தம் போட்டவாறு மேடை முன்பு வந்து தகராறில் ஈடுபட்டனர். உடனே மாவட்ட செயலாளர் மருதராஜ் கூட்டத்தை நிறுத்த  சொல்ல நீங்கள் யார்? என கேள்வி கேட்டார். உடனே அவர்கள் நாங்கள் இல்லாமல் நீங்கள் வெற்றி பெற முடியுமா? என சத்தம் போட்டனர். 

 

d3

 

நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூட்டத்தைப் பார்த்து சமாதானப்படுத்த முயன்றார். அதற்கு அவர்கள் கட்டுப்படாமல் மீண்டும் கூச்சலிடவே முன்னாள் அமைச்சர் நத்தம் இரா.விசுவநாதன் மைக்கில் அமைதியாக இருக்கச் சொன்னார். முதலில் நீங்கள் உட்காருங்கள் என தொப்பம்பட்டியைச் சேர்ந்த அ.தி.மு.க நிர்வாகிகள் கூச்சலிட்டனர். உடனே மூவரும் நாற்காலியில் உட்கார்ந்தபின்பு வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தனது அருகில் உட்கார்ந்திருந்த தொப்பம்பட்டி ஒன்றிய செயலாளர் கிட்டுச்சாமியை கூப்பிட்டு என்னய்யா விசயம் விசாரி என கூறினார்.

 

d

 

அப்போது சரமாரியாக குற்றச்சாட்டுகளை தொப்பம்பட்டி ஊராட்சி அ.தி.மு.க. நிர்வாகிகள் வீசினார்கள். தொப்பம்பட்டி ஒன்றிய செயலாளர் கிட்டுச்சாமி கூச்சலில் ஈடுபட்ட தனது ஒன்றியத்தைச் சேர்ந்த (தொப்பம்பட்டி ஊராட்சி) நிர்வாகிகளை சமாதானப்படுத்த முயன்றார். உடனே அ.தி.மு.க. நிர்வாகிகள் முதலில் உன்னை மாற்ற வேண்டும் கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என கூச்சலிட்டனர். தொடர்ந்து அவர்கள் கூச்சலிடவே மாவட்ட செயலாளர் மருதராஜ், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், முன்னாள் அமைச்சர் இரா.விசுவநாதன் ஆகியோர் மௌனமாக இருந்தனர். அப்போது அ.தி.மு.க. நிர்வாகி ஒருவர் தொப்பம்பட்டி ஒன்றியத்தில் சத்துணவு பணிக்கான வேலை நியமனத்தில் பலமுறைகேடுகள் நடந்துள்ளது. மாற்றுக்கட்சியினருக்கு ஒன்றிய செயலாளர் கிட்டுச்சாமி கூடுதலாக தொகையை வாங்கிவிட்டு சத்துணவு வேலை கொடுத்துள்ளார். 

 

v

 

இப்படி செய்தால் கட்சியை எப்படி வளர்க்க முடியும் என்று கேட்டனர். இதுவரை அமைதியாக இருந்த மற்ற தொகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் நீங்களே சத்தம் போட்டுக் கொண்டிருந்தால் கூட்டம் எப்படி நடத்த முடியும் என்று கேட்டனர். அப்போது திண்டுக்கல்லைச் சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகி ஒருவர் தொப்பம்பட்டியைச் சேர்ந்த அ.திமு.க. நிர்வாகிகளை பார்த்து நீங்கள் எல்லாம் அ.தி.மு.க. கட்சிக்காரர்களா? இப்படி செய்தால் எப்படி கட்சி வளரும் என கேள்வி கேட்டார். உடனே அவர்கள் அமைச்சரும், மாவட்ட செயலாளரும் இருக்கும் இடத்தில் தான் கேள்வி கேட்க முடியும். மாவட்ட கழகத்தில் (கட்சி அலுவலகம்) எப்படி கேட்க முடியும் என்று கேட்டதோடு, கேள்வி கேட்ட அந்த அ.தி.மு.க. தொண்டரை நாற்காலியை தூக்கி அடித்தவுடன் சரமாரியாக தொப்பம்பட்டியைச் சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து அந்த அதிமுக நிர்வாகியை கூட்டத்திலேயே ஓட ஓட தர்ம அடி கொடுத்து சேர்களை தூக்கி வீசி அவர் மீது எரிந்து ஓடவிட்டனர். அவர் உயிருக்கு பயந்து மண்டபத்தின் தென்புறம் உள்ள சமையலறைக்குள் புகுந்தார்.

 

d

 

அங்கேயும் அடிப்பதற்காக விரட்டி வந்த அ.தி.மு.க. நிர்வாகிகளை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். உடனடியாக அவர்கள் மாவட்ட அ.தி.மு.க நிர்வாகிகளுக்கு கோசமிட்டவாறு கூட்;டம் நடைபெற்ற மண்டபத்தை விட்டு வெளியேறிவிட்டனர். அதன்பின்னர் மண்டபத்தில் அமைந்திருந்த கட்சித் தொண்டர்களை சமாதானப்படுத்தினார்கள். அதன்பின்னர் பேசிய வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனோ... நாமெல்லாம் அண்ணன், தம்பியை போல் ஒற்றுமையாக இருந்து கட்சிப் பணியாற்ற வேண்டும். நம்மிடம் உறவாடி நம்முடைய கட்சி ஒற்றுமையை சீர்குழைப்பதற்காக ஒருசிலர் திட்டமிட்டு பிரச்சனையை ஏற்படுத்தி வருகின்றனர். அதற்கு அ.தி.மு.க. தொண்டர்கள் இடம் கொடுக்கக்கூடாது என கூறினார். இச்சம்பவம் திண்டுக்கல் மாவட்டத்தில் எதிர்கட்சியினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது!

 

சார்ந்த செய்திகள்

Next Story

மறைந்த நரசிம்மராவுடன் தம்பிதுரை இப்போது பேசுகிறாரா? திண்டுக்கல் சீனிவாசன் பேச்சால் சலசலப்பு

Published on 05/08/2018 | Edited on 05/08/2018
sr

 

மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை டெல்லி சென்று நரசிம்மராவுடன் இருப்பார் என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மேடையில் பேசியதால் 14 வருசத்துக்கு முன்ன மறைந்த நரசிம்மராவ் இப்போ பிரதமரா? அவருடன் தம்பிதுரை பேசுகிறாரா? என்று கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.  

 

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் நடைபெற்ற ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு விழாவில், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பங்கேற்றார்.  சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் இவ்விழாவில் பங்கேற்றார்.  விழாவில் பங்கேற்க வேண்டிய தம்பிதுரையின் வருகையில் தாமதம் ஏற்பட்டது.   இந்த நிலையில் திண்டுக்கல் சீனிவாசன் பேசியபோது, தம்பிதுரையை புகழ்ந்து பேசினார். அப்போது அவர்,

 ‘’அவருடையை தொகுதி பரமத்தி வேலூர் வரை இருக்கிறது.  காலையில் அங்கே இறங்கி பேசிவிட்டு ஊர் ஊராக மின்னல் வேகத்தில் வருவார்.  மத்தியான சாப்பாடு வேடசந்தூர். சாயங்கால சாப்பாடு புதுக்கோட்டை.  அப்புறம் இன்னொரு தொகுதிக்கு போயிடுவார்.  போயிட்டு டெல்லிக்கு போய் சேர்ந்திட்டு நரசிம்மராவுடன் உட்கார்ந்திருப்பார்’’

என்று தெரிவித்தார். 

 

   முன்னாள் பிரதமர் பி.வி. நரசிம்மராவ், கடந்த 2004ம் ஆண்டில் டிசம்பர் 23ம் தேதி மறைந்தார். 14 வருடங்களுக்கு பின்னர் அவர் இப்போது பிரதமராக இருப்பது போலவும், அவர் டெல்லியில் இருப்பது போலவும், அவரை தம்பிதுரை சந்தித்து பேசுவது போலவும் சீனிவாசன் பேசியதால்,  என்னது ...14 வருசத்துக்கு முன்ன மறைந்த நரசிம்மராவ் இப்போ பிரதமரா? அவருடன் தம்பிதுரை பேசுகிறாரா? என்று கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.