Skip to main content

என்.எல்.சியின் அடையாளமான நெய்வேலி ஆர்ச் இடிப்பு! 

Published on 26/09/2019 | Edited on 26/09/2019

கடலூர் மாவட்டம் பண்ருட்டி- வடலூர் நெடுஞ்சாலையில், நெய்வேலி நகரப்பகுதிக்கு செல்லும் நுழைவாயிலில் என்.எல்.சி நிறுவனம் சார்பில் இரண்டு வளைவுகள் (ஆர்ச்) அமைக்கப்பட்டிருந்தது. இந்த ஆர்ச் என்.எல்.சி-யின் அடையாளமாக  பல ஆண்டு காலமாக திகழ்ந்து வருகிறது. மேலும் அந்த பகுதியும் 'ஆர்ச் கேட்' என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்தது.

 Demolition of the Niveli Arch, the symbol of the NLC

இந்நிலையில் இந்த இரண்டு ஆர்ச்சுகளில் ஒன்று இன்று (25/09/2019) இடிக்கப்பட்டது.  மற்றொன்றும்  ஓரிரு நாட்களில் இடிக்கப்பட உள்ளது. விக்கிரவாண்டி - தஞ்சாவூர் நான்கு வழி சாலை திட்டத்திற்கு இடையூறாக ஆர்ச்கள் இருப்பதால் இடிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். பல ஆண்டுகளாக அடையாளமாக திகழ்ந்த என்.எல்.சி நுழைவாயில் இடிக்கப்பட்ட சூழல், அப்பகுதி மக்களின் மனதில் நெருடலை ஏற்படுத்தியுள்ளது. 

 

சார்ந்த செய்திகள்