கடலூர் - நாகை மாவட்டத்தில் பெட்ரோகெமிக்கல் மண்டலம் திட்டத்திற்கு எதிராக பி.ஆர் பாண்டியன் பிரச்சாரம்
கடலூர்- நாகை மாவட்டத்தில் உள்ள 45 கிராமங்களில் மத்திய அரசு மாநில அரசு துணையுடன் விவசாய நிலங்கள் மற்றும் குடியிறுப்பு பகுதிகளில் பெட்ரோகெமிக்கல் மண்டலம் அமைக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது. இதற்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பல்வேறு கட்ட எதிர்பு கிளம்பியுள்ளது. இந்த நிலையில் தமிழக அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு பொதுச்செயலாளர் பி.ஆர் பாண்டியன் கடந்த 7ஆம் தேதியில் இருந்து 14 வரை சம்பந்தபட்ட கிராமங்களில் இந்த திட்டம் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகிறார். இந்நிலையில் 12ஆம் தேதி மாலையில் சிதம்பரத்தில் வேன் மூலம் பெட்ரோகெமிக்கல் மண்டலம் குறித்து பிரச்சாரம் செய்தார். இதில் சிதம்பரம் மற்றும் சுற்றுவட்ட பகுதியில் உள்ள விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
-காளிதாஸ்