Skip to main content

காட்டுமன்னார்குடியில் சோகனூர் சம்பவத்தை கண்டித்து தீண்டாமை ஒழிப்பு முண்ணனி மற்றும் சி.பி.எம் கண்டன ஆர்ப்பாட்டம்!

Published on 11/04/2021 | Edited on 11/04/2021

 

CPM struggle in Kattumannargudi against the Sokanoor incident!

 

காட்டுமன்னார்குடி சுவாமி சகஜானந்தா சிலை அருகில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் அரக்கோணம் அருகே சோகனூரில் இரண்டு இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொலை செய்தவர்களை கைது செய்து உரிய நடவடிக்கை எடுத்திடவும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய நிவாரணமும் வழங்கிடக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைத்தலைவர் பிரகாஷ் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் குமராட்சி ஒன்றிய செயலாளர் மூர்த்தி முன்னிலை வகித்தார். வட்டக் குழு உறுப்பினர்கள் வெற்றிவீரன், ஜெயக்குமார், கிளைச் செயலாளர்கள் தேசிங்கு, பொன்னம்பலம், பூச்சந்திரன், ராஜேந்திரன், தனபால், செல்வராஜ், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சட்டமன்றத் தொகுதி துணை செயலாளர் சக்திவேல், ராவணன், புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி சார்பில் வெற்றிகுமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வட்ட செயலாளர் முருகவேல் மற்றும் சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'அமைச்சர் வரும் நாளில் கூட சுத்தம் செய்ய மாட்டீர்களா? - கடுகடுத்த அமைச்சர்

Published on 04/01/2024 | Edited on 04/01/2024
 'You will not clean even on the day the minister comes?'-said the minister

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த புளியமங்கலத்தில் அரசு ஐடிஐ அமைந்துள்ளது. இங்கு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி கணேசன் இன்று திடீர் ஆய்வு நடத்தினார். அப்போது ஐடிஐ முதல்வர் சித்ராவிடம் இந்த ஐடிஐ எப்போது தொடங்கப்பட்டது?, எவ்வளவு மாணவர்கள் படிக்கிறார்கள் என்று கேட்டறிந்தார். அதைத்தொடர்ந்து ஆய்வுக்காக ஒவ்வொரு பணிமனையாக செல்ல முயன்ற போது ஐடிஐயின் தொடக்கப் பகுதியிலேயே குப்பை கூளங்கள் நிறைந்து காணப்பட்டது.

இதைப்பார்த்து ஆத்திரமடைந்த அமைச்சர் சி.வி கணேசன் இப்படித்தான் ஐடிஐ வைத்திருப்பீர்களா? அமைச்சர் வரும் நாளில் கூட சுத்தம் செய்ய மாட்டீர்களா என்று கேட்டார். அதற்கு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் சுந்தரவல்லி ஆட்கள் பற்றாக்குறையால் இதுபோன்று இருப்பதாக தெரிவித்தார். அதற்கு அமைச்சர் சி.வி கணேசன் இதற்கு எல்லாம் ஐடிஐ முதல்வர் தான் பொறுப்பு ஏற்க வேண்டும். தினமும் ஐடிஐ வளாகத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றார்.

அதைத்தொடர்ந்து திடீரென அங்கிருந்த கழிவறைக்குள் சென்று பார்த்து அதிர்ச்சியானார். இப்படி சுத்தமில்லாமல் இருக்கிறதே என்று தெரிவித்தார். பின்னர் ஒவ்வொரு பணிமனையாக சென்று மாணவர்களுடன் கலந்துரையாடினர். பயிற்றுநர்கள் பாடம் எடுப்பதை மாணவர்களுடன் அமர்ந்து கவனித்தார்.

தரமான பயிற்சியை கொடுத்து இங்கு படிக்கும் மாணவர்களுக்கு பன்னாட்டு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு கிடைக்க செய்ய வேண்டும் என்றார். மேலும் மாணவர்கள் சிலரிடம் ஐடிஐ படித்தால் என்னென்ன வேலை வாய்ப்புகள் உள்ளது என்று தெரியுமா என்றும் கேட்டறிந்தார். ஒவ்வொரு பணிமனையாக சென்று சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக அமைச்சர் சி .வி கணேசன் ஆய்வு செய்தார். ஆய்வை தொடர்ந்து ஐடிஐ முதல்வர் மற்றும் அலுவலர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

Next Story

சிகரெட் தருமாறு கடைக்காரரிடம் தகராறு செய்த இளைஞர்; போலீசார் விசாரணை

Published on 08/05/2023 | Edited on 08/05/2023

 

ranipet arakkonam nearest kizanthurai shop owner youngster related incident 

 

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த கீழாந்துரை கிராமத்தைச் சேர்ந்தவர் காமேஷ். இவர் அப்பகுதியில் பெட்டிக்கடை ஒன்றை நடத்தி வருகிறார்.

 

இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த கிஷோர் (வயது 27) என்பவர் நள்ளிரவு 12 மணிக்கு கடையைத் திறந்து சிகரெட் தருமாறு காமேஷிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் இந்த நேரத்தில் எல்லாம் கடையைத் திறக்க முடியாது என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கிஷோர் தனது நண்பர்களான அஜித் குமார், சதீஷ் மற்றும் விக்னேஸ்வரன் ஆகியோருடன்  சேர்ந்து கடையின் பூட்டை கத்தியால் வெட்டியுள்ளார். அப்போது பொதுமக்கள் அவரைத் தடுத்து நிறுத்தி அவர்களை வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்.

 

இதுகுறித்து கடையின் உரிமையாளர் காமேஷ் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் ஆதாரங்களுடன் அரக்கோணம் தாலுகா போலீசில் புகார் தெரிவித்துள்ளார். போலீசார் இது குறித்து விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் சிகரெட் தருமாறு கடையின் உரிமையாளரிடம் கேட்டுத் தர மறுத்ததால் பூட்டை கத்தியால் வெட்டிய அராஜக சம்பவம் அரக்கோணம் அருகே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.