தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்து வாக்கு எண்ணிக்கைகாக தமிழகம் காத்திருக்கிறது. 'ஸ்ட்ராங் ரூம்' எனப்படும் கட்டுப்பாட்டு அறையில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. வரும் மே 2 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட இருக்கிறது.
இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளரான மாதவராவ் (வயது 63) நுரையீரல் தொற்று காரணமாக கடந்த இரண்டு வாரங்களாக மதுரை தனியார் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை அவர் சிகிச்சை பலனிற்றி உயிரிழந்துள்ளார்.
முன்னதாக திமுக தலைவர் ஸ்டாலின் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்திருந்தார். இந்நிலையில் காங்கிரஸ் வேட்பாளரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றால் மீண்டும் காங்கிரஸ் வேட்பாளர் ஒருவர் போட்டியிடுவார் என்றார். மேலும், இந்தியாவில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டு நிலையில் வெளிநாட்டுக்கு தடுப்பூசி ஏற்றுமதி செய்வது ஏன் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார் கே.எஸ்.அழகிரி.