கிறிஸ்துமஸ் திருநாளை முன்னிட்டு, தமிழ்நாடு முதலமைச்சர், ஆளுநர், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
அதன்படி, தமிழ்நாடு முதலமைச்சர், “சமத்துவம், சகோதரத்துவம், ஈகை ஆகிய மனிதநேய பண்புகளின் விழாவாக, அன்பைப் பரிமாறி, ஏழை எளியோர்களுக்கு உதவும் திருநாள் கிறிஸ்துமஸ்.”
ஆளுநர் ஆர்.என்.ரவி “கிறிஸ்துமஸ் திருநாள் நாம் அனைவரும் ஒரே குடும்பம், நமக்கு ஒரே எதிர்காலம் என்பதை அடிக்கோடிட்டு காட்டுகிறது."
அதிமுக எடப்பாடி பழனிசாமி, “இயேசு போதித்த அன்பு, எளிமை, கருணை போன்ற உயரிய குணங்களை மக்கள் அனைவரும் பின்பற்றி, சகோதரத்துவத்துடன் வாழ வேண்டும்.”
அதிமுக ஓ.பன்னீர்செல்வம், “அன்பின் சிறப்பை, வலிமையை உலகிற்கு எடுத்துரைத்த இயேசுவின் பிறந்தநாளன்று நாமும் அன்பை விதைப்போம்.”
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, “மிகச்சிறந்த மனிதாபிமான உணர்வோடும், சேவை மனப்பான்மையுடனும் வாழ்ந்து வரும் கிறிஸ்துவர்களுக்கு வாழ்த்துகள்.”
பாமக நிறுவனர் இராமதாஸ், “மனிதர்களுக்கு மன்னிக்கக் கற்றுக் கொடுத்த மகான் இயேசு கிறித்துவின் பிறந்தநாளை கிறித்துமஸ் திருநாளாக கொண்டாடும் சகோதரர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.”
பாமக தலைவர் அன்புமணி, “அன்பின் அடையாளமாகவும் கருணையின் வடிவமாகவும் வாழ்ந்த இயேசு கிறித்துவின் பிறந்தநாளை கிறித்துமஸ் திருநாளாக கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.”
பாஜக தலைவர் அண்ணாமலை, “அன்பையும், சகோதரத்துவத்தையும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே போதித்து அதிசயம் நடத்தியவர் இயேசுநாதர்” என்று தலைவர்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.