Published on 30/05/2022 | Edited on 30/05/2022
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இன்று (30/05/2022) திருச்சிராப்பள்ளி மாநகராட்சி அலுவலகத்திற்குச் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். மேலும், மாநகராட்சி மருத்துவமனைகள் மற்றும் சுகாதார மையங்களின் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
இந்நிகழ்வின்போது, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையர் பி.எம்.என். முஜிபுர் ரகுமான் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.