Skip to main content

சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் கருப்புச்சட்டைக்குத் தடை!

Published on 17/09/2017 | Edited on 17/09/2017
சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் கருப்புச்சட்டைக்குத் தடை!

சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்திற்குள் கருப்புச்சட்டை அணிந்துசெல்பவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை சேப்பாக்கம் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று ஆஸ்திரேலியா மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகளுக்கு இடையே ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியைக் காண சென்னை மற்றும் சுற்றுப்பகுதிகளைச் சேர்ந்த கிரிக்கெட் ரசிகர்கள் சென்றுள்ளனர். இவர்களில் கருப்புச்சட்டை மற்றும் கருப்பு டி-சர்ட் அணிந்துகொண்டு சென்ற இளைஞர்களை வெளியேற்றி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், கிரிக்கெட் போட்டியைக் காண வந்த பெரும்பாலான ரசிகர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

சார்ந்த செய்திகள்