Skip to main content

அமைச்சரின் பதவி மாற்றம்; மொத்தக் கூட்டத்தில் ஒற்றை 'மாஸ்க்'

Published on 11/05/2023 | Edited on 11/05/2023

 

PTR

 

தமிழக அமைச்சரவையில் புதிய அமைச்சராக  டி.ஆர்.பி.ராஜா இன்று பொறுப்பேற்றார். ஆளுநர் மாளிகையில் முதல்வர் முன்னிலையில் டி.ஆர்.பி.ராஜாவிற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். தற்பொழுது புதிதாக பதவியேற்ற அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவிற்கான துறை மற்றும் சில அமைச்சர்களின் துறைகள் மாற்றியமைக்கப்பட்டு அறிவிப்பு வெளியாகியது.

 

தற்போது வெளியான தகவலின்படி டி.ஆர்.பி.ராஜாவுக்கு தங்கம் தென்னரசு வகித்து வந்த தொழில்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. மனோ தங்கராஜ் வகித்து வந்த தொழில்நுட்பத்துறை நிதித்துறை அமைச்சராக இருக்கும் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. அவர் கவனித்து வந்த நிதித்துறை மற்றும் மனித வளத்துறை தங்கம் தென்னரசுவிற்கு கொடுக்கப்பட்டுள்ளது. அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்ட நாசர் வகித்து வந்த பால்வளத்துறை மனோ தங்கராஜுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனுக்கு தமிழ் வளர்ச்சித்துறை கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.

 

இந்தநிலையில் டி.ஆர்.பி.ராஜா அமைச்சராகப் பதவியேற்ற பின் ஆளுநருடன் அமைச்சர்கள் எடுத்துக்கொண்ட குழு புகைப்படத்தில் அமைச்சர் பி.டி.ஆர் மட்டும் மாஸ்க் (முகக்கவசம்) அணிந்திருந்தார். இது சிலரின் கவனத்தை ஈர்த்தது. இது எதிர்ப்பின் அல்லது அதிருப்தியின் வெளிப்பாடாக இருக்கலாம் என கருதப்பட்ட நிலையில் 'தகவல் தொழில்நுட்பத் துறை மூலம் தமிழ்நாட்டை மீண்டும் முன்னணி மாநிலமாக நிலைநிறுத்தும் முயற்சியில் ஈடுபடுவேன். புதிதாக நிதி அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தங்கம் தென்னரசுவிற்கு வாழ்த்து. நம்பர் ஒன் துறையாக விளங்கும் தகவல் தொழில்நுட்பத் துறையை வழங்கிய முதலமைச்சருக்கு நன்றி' என பி.டி.ஆர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்