Skip to main content

கோவையில் பெண்ணின் வங்கி கணக்கில் ரூ.45 ஆயிரம் டெபாசிட் செய்த மத்திய அரசு! - மோடியின் ரூ.15 லட்சம் திட்டமா?

Published on 03/07/2018 | Edited on 03/07/2018
Rs-45-thousand-deposit


கோவையில் பெண் ஒருவரின் வங்கி கணக்கில் மத்திய அரசு ரூ.45 ஆயிரம் டெபாசிட் செய்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

கோவை காளிபாளையம் பகுதியை சேர்ந்தவர் அன்புசெல்வன். இவரது மனைவி பிருந்தா (வயது 25). இவர் அந்த பகுதியில் உள்ள கனரா வங்கியில் கடந்த 2014ம் ஆண்டு சேமிப்பு கணக்கு தொடங்கினார். இந்த நிலையில் கடந்த 28-ந்தேதி இவரது செல்போனுக்கு ஒரு மெசேஜ் வந்தது. அதில் தனது வங்கி கணக்கில் ரூ.45 ஆயிரம் பணம் வந்ததாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

 

 

இதையடுத்து பிருந்தா தனது வங்கி கணக்கை சரிபார்த்தார். அப்போது கணக்கில் ரூ.45 ஆயிரம் இருப்பது தெரியவந்தது. இதனால் பிருந்தா தனது கணவர் அன்புசெல்வனுடன் வங்கிக்கு சென்றார். அங்கு வங்கி அதிகாரிகளை நேரில் சந்தித்து இதுபற்றி தெரிவித்தனர். அப்போது வங்கி அதிகாரி, பெண்கள் வீடு கட்டுவதற்காக மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஜ் யோஜனா திட்டம் மூலம் பணம் தருகிறது. அதில் உங்களுக்கு வந்திருக்கும் என்று கூறினார்.

இது குறித்து பிருந்தா கூறியதாவது, நாங்கள் இதுவரை எந்த விதமான திட்டத்திற்கும் நான் விண்ணப்பிக்கவில்லை. அதனால் எனக்கு பணம் வருவதற்கு வாய்ப்பு இல்லை. பிரதமர் மோடி கடந்த 2015ம் ஆண்டு ஒவ்வொரு குடிமகன் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் ரூபாய் பணம் போடுவதாக கூறியிருந்தார். அதற்காக முன்தொகையாக இந்த பணம் வங்கி கணக்கில் அளிக்கப்பட்டுள்ளதா? அப்படி என்றால் மீதி பணம் எப்போது வரும்? என்றார்.

சார்ந்த செய்திகள்