Skip to main content

கூடங்குளத்தில் சிறப்பு நீதிமன்றம் அமைக்க கோரிய வழக்கு - அரசு பதிலளிக்க உத்தரவு

Published on 27/09/2018 | Edited on 27/09/2018
ku

 

கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்குகளை விரைந்து முடிப்பதற்கு கூடங்குளம் அல்லது ராதாபுரத்தில் சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க உத்தரவிட கோரிய வழக்கில் அரசு தரப்பில் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் இடிந்தகரையை சேர்ந்த சுந்தரி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், 

"கூடங்குளம் அணு உலைக்கு எதிராக நான் உட்பட அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், குழந்தைகள் என அமைதியான தொடர் போராட்டங்களை  நடத்தினோம்.   இது தொடர்பாக கூடங்குளம்,ராதாபுரம்,பளவுர், காவல் நிலையங்களில் 300 க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.என் மீதும் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யபட்டது.

இதில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி அரசு 248 வழக்குகளை திரும்ப பெற்றது.மீதம் உள்ள வழக்குகள் தற்போது நாங்குநேரி,வள்ளியூர் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது.   இந்த வழக்குகள் மீனவர்கள் மீது அதிகமாக போடப்பட்டு இருக்கிறது.  நாங்குநேரி மற்றும் வள்ளியூர் நீதிமன்றங்களில் வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதால், தினம்தோறும் 50 கிலோமீட்டர் மேல் பயணம் செய்து வழக்கு விசாரனைக்கு சென்று வருகிறோம்.

 

இதனால் பயண செலவும் மற்றும் மன உழைச்சல்க்கும் ஆளாகி உள்ளோம்.  உச்சநீதிமன்றம் இதுபோன்ற பல்வேறு வழக்குகளில் சிறப்பு நீதிமன்றகளை அமைத்து வழக்குகளை விரைவாக முடிக்க உத்தரவிட்டு வழக்குகள் முடிக்கப்பட்டுள்ளன.   எனவே கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்குகளை விரைந்து முடிப்பதற்கு கூடங்குளம் அல்லது ராதாபுரத்தில் சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க உத்தரவிட வேண்டும்’’ என மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு இன்று நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், என்.சதீஷ்குமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.  அப்போது மனு குறித்து அரசு தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

 

சார்ந்த செய்திகள்