Skip to main content

எச்சரிக்கையாக இருக்க வேண்டும்... -முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்   

Published on 29/05/2020 | Edited on 29/05/2020
EPS

 

இன்று மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனை கூட்டத்தின் பிறகு, செய்தியாளர்களை சந்தித்த அவர்,


சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் கரோனா கட்டுக்குள் வந்துள்ளது. வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களால் நோய் தொற்று அதிகரிப்பதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சென்னையில் கரோனா கட்டுக்குள் கொண்டுவர மக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும். தொழிற்சாலைகளில் தனிமனித இடைவெளியை பின்பற்றி பணியாளர்கள் பணிபுரிய வேண்டும்.

மாவட்ட ஆட்சியர்கள் தாங்களே தளர்வுகளை அறிவிக்கக் கூடாது. தலைமை செயலாளருடன் ஆட்சியாளர்கள் ஆலோசித்து தளர்வுகள் குறித்து முடிவெடுக்க வேண்டும். கட்டுமான பணிகள் எவ்வித தடையும் இன்றி தொடர்ந்து செயல்படுத்த வேண்டும். கரோனாவை கட்டுக்குள் கொண்டு வர மாவட்ட ஆட்சியர்கள் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

 

 


கோடை காலத்தில் குடிநீர் பிரச்சனை ஏற்பட்டால் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜூன் 12-ல் மேட்டூர் அணை திறக்கப்பட உள்ளதால் கால்வாய் தூர்வாரும் பணிகளை கண்காணிக்க வேண்டும். 100 நாள் வேலைத்திட்டத்தை பொருத்தவரை முழு அளவில் பணியாளர்களை அமர்த்தி கொள்ளலாம். வெளிமாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் தங்கியிருந்து பணி செய்ய விரும்பினால் அனுமதிக்க வேண்டும். வெளிமாநில தொழிலாளர்களை கண்காணித்து அனுப்பி வைக்கவேண்டும் என்றார்.

 

சார்ந்த செய்திகள்