ஜல்லிக்கட்டுக்கு போராடியதை போல இளைஞர்கள் நீட் தேர்வுக்கு எதிராக பேராட வேண்டும் –வைகோ
மதிமுக மகளிர் அணி, மா.செ. ஆலோசனை கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டார்.
ஆலோசனை கூட்டத்தில் பேசிய மாநில மகளிர் அணி செயலாளர் மருத்துவர் ரொகையா பேசும் போது.. இங்கே 40 மாவட்ட மகளிர் அணி செயலாளர்கள் கலந்து கொண்டிருக்கிறீர்கள், கட்சி நமக்கு என்ன செய்தது என்பதை விட நாம் கட்சிக்கு என்ன செய்கிறோம் என்பது தான் முக்கியம். இங்கே வந்திருக்கும் எல்லோரும் 5 ஆண்டுகளுக்கு சங்கொலி சந்தா செலுத்த வேண்டும் என்று சொல்லி, தஞ்சையில் நடைபெறும் மாநாட்டு நிதியாக 1 இலட்ச ரூபாய் நன்கொடை கொடுத்தார்.
மகளிர் அணி செயலாளர்கள் மாநாட்டை துவக்கி வைத்து பேசிய வைகோ, திராவிட இயக்கம் சோதனைகளைச் சந்தித்துக்கொண்டிருக்கிறது. நீட் அரக்கன் மூலம் மாணவர்களின் எதிர்காலத்தை நசுக்கிறது. இதை பொதுமக்கள் எல்லோரும் சேர்ந்து போராட வேண்டியது. ஜல்லிக்கட்டுக்கு எதிராக இளைஞர்கள் போராடுவது போல நீட் தேர்வுக்கு எதிராகவும் பேராட வேண்டும். பகவத் கீதையை மட்டும் அப்துல்கலம் சமாதியில் வைத்தது அராஜகம், மீத்தேன் ஹட்ரோ கார்பன் ஆகியவற்றால் டெல்டாவை பாலைவனமாக்க மத்திய அரசு முயற்சிக்கிறது என்று பேசினார்.
ஜெ.டி.ஆர்.