பெங்களுரூவில் இருந்து சென்னைக்கு தமிழ்நாடு அரசு பேருந்து ஒசூர், கிருஷ்ணகிரி, வாணியம்பாடி, ஆம்பூர் வழியாக ஜீன் 17ந்தேதி விடியற்காலை சென்னை சென்றுகொண்டிருந்தது. ஆம்பூர் அடுத்த சோலூர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து சென்றுக்கொண்டிருந்தபோது, ஓட்டுநர் கண் அசந்துவிட்டுள்ளார், சில நொடி கண் அசந்ததும் பேருந்து தடுப்பு சுவற்றில் மோதி பேருந்து கவிழ்ந்து கீழே உரசியபடி சென்றது.

இந்த விபத்தால் பேருந்துக்குள் இருந்த 40 பயணிகள் பலத்த காயம்மடைந்தனர். அந்த சாலையில் சென்ற பேருந்துகள், லாரிகள், கார்கள் நின்று விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர். உடனடியாக 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ், கார்கள் மூலமாக உடனடியாக மருத்துவமனையில் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது, 40 பயணிகளில் 3 பயணிகளுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மிதமான வேகத்தால் காயங்களோடு பயணிகள் உயிர் தப்பினர். அதிக வேகமாக பேருந்து வந்திருந்தால் பல பயணிகள் உயிர் துறந்திருப்பர் என்பது குறிப்பிடதக்கது.