கடலூரில் குண்டர் சட்டத்தில் 100வது
நபராக சாராய வியாபாரி கைது!
கடலூர் மாவட்டம் காடாம்புலியூர் அருகிலுள்ள கருக்கை வடக்கு தெருவை சேர்ந்த ராஜவேல் மகன் சங்கு என்பவர் தனது வீட்டின் பின்புறம் இரண்டு லாரி ட்யூப்களில் தலா 55 லிட்டர் வீதம் 110 லிட்டர் சாராயம் வைத்திருந்தவரை காடாம்புலியூர் உதவி ஆய்வாளர் ஜெயதேவி கடந்த 16-ஆம் தேதி கைது செய்ததுடன், சாராயத்தை கைப்பற்றி கடலூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.
காடாம்புலியூர் காவல் ஆய்வாளர் (பொறுப்பு) முருகேசன், இவ்வழக்கை புலன் விசாரணை மேற்கொண்டதில் சங்கு மீது ஏற்கனவே 4 சாராய வழக்குகள் உள்ளன. இவர் தொடர்ந்து குற்ற செயல்கள் செய்து வருவதால் இவரின் குற்ற செய்கையை கட்டுபடுத்தும் நோக்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே குண்டர் தடுப்பு காவலில் வைக்க ஆணையிட்டதின் பேரில் சங்கு ஓராண்டு குண்டர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டார்.
கடந்த இரண்டு வருடங்களில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் அதிரடி நடவடிக்கையாக இதுவரை 100 சமூக விரோதிகள் குண்டர் தடுப்பு காவலில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- சுந்தரபாண்டியன்