சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் வழிபடலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட 65 சீராய்வு மனுக்கள் மீதான வழக்கில் இன்று காலை உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 பேர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றுவதாக அறிவித்தது. அதுவரை பழைய நடைமுறையே தொடரும் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, சபரிமலைக்கு வீம்புக்காக செல்வேன் என்பது பிரச்சனைக்கு வழிவகுக்குமே தவிர முடிவுக்குவராது. தமிழகத்தில் வெற்றிடம் உண்மைதான் ரஜினிதான் தமிழகத்தின் உள்ள அரசியல் வெற்றிடத்தை நிரப்புவார் என்று முக.அழகிரி சொல்லியிருக்கும் கருத்துக்களை பெரிதாக பொருட்படுத்த வேண்டியதில்லை. தேர்தலில் பார்த்துக்கொள்வோம். நடிகர்கள் கட்சி தொடங்கலாம் ஆனால் மக்களிடம் நடிக்க கூடாது என்றார்.