Skip to main content

''நான் கூறினால் நாளைக்கே சசிகலாவுக்கு...''-அமைச்சர் சி.வி.சண்முகம் பேட்டி 

Published on 31/01/2021 | Edited on 31/01/2021

 

admk minister cv sanmugam press meet

 

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை நிறைவடைந்ததை அடுத்து, கடந்த 27ஆம் தேதி விடுவிக்கப்பட்டார். இருப்பினும் உடல் நலக் குறைவு காரணமாக அவர் பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று  வந்த நிலையில், இன்று அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

 

சசிகலா விடுதலையாவதையொட்டி அதிமுக நிர்வாகிகள் சிலர் சசிகலாவை வரவேற்று பேனர் மற்றும் போஸ்டர்கள் அடித்திருந்த நிலையில் அவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்திடம் சசிகலாவுக்கு ஆதரவாக முன்னாள் எம்.எல்.ஏ ரகுபதி போஸ்டர் ஒட்டியது பற்றிய கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அமைச்சர், ''அதிமுகவினர் சசிகலாவை வரவேற்று போஸ்டர் அடிப்பது என்பது ஒரு பெரிய விஷயமா?  நான் கூறினால் நாளைக்கே சசிகலாவுக்கு எதிராக ஒரு லட்சம் பேர் போஸ்டர் ஒட்டுவார்கள்'' என  பதிலளித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்