Skip to main content

தி.நகர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வழக்கு- விசாரணை தொடங்கி விட்டதாக உயர்நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை பதில்!

Published on 23/07/2021 | Edited on 23/07/2021

 

 

admk former mla chennai high court vigilance department

சென்னை தியாகராய நகர் சட்டமன்ற தொகுதியின் அ.தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சத்திய நாராயணன் தன்னுடைய பதவிக் காலத்தில் தொகுதி நிதியை செலவிட்டதில் முறைகேடு நடந்துள்ளதாக சமூக ஆர்வலர் அரவிந்தாக்ஷன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

 

அந்த மனுவில், 2016- 17 ஆம் ஆண்டு உள்விளையாட்டு அரங்கம் கட்டியதில் மோசடி செய்துள்ளார். 2017- 18 ஆம் நிதி ஆண்டில் அரசாணைக்கு புறம்பாக அந்த ஆண்டுக்கான நிதி 2 கோடி ரூபாய்க்கும் ஒரே ஒப்பந்ததாரர் மூலமாக  சாலை அமைத்தது. 2018- 19 ஆம் ஆண்டு நிதியில் 30 லட்ச ரூபாய்க்கு  கட்டிடமே கட்டாமல் செலவு கணக்கு மட்டுமே எழுதியது என தொடர்ச்சியாக மூன்று நிதியாண்டுகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியை செலவிட்டதில் விதி மீறல்களும், அதிகமான முறைகேடும் செய்துள்ளார் என ஆதாரத்தோடு கடந்த ஜனவரி மாதம் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் கொடுத்திருந்தார்.

 

ஆனால் புகாரின் மீது நடவடிக்கை எடுக்கப்படாத காரணத்தால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கடந்த மாதம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது ஜூலை மாதம் 20- ஆம் தேதி பதிலளிக்க வேண்டுமென லஞ்ச ஒழிப்புத்துறைக்கு நீதிபதி நிர்மல்குமார் உத்தரவிட்டிருந்தார்.

 

இந்நிலையில், முன்னாள் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் சத்தியநாராயணன் முறைகேடு செய்யதாக தொடரப்பட்ட அந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது. நீதிபதி நிர்மல் குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் சட்டப்படியான விசாரணை தொடங்கிவிட்டதாக தெரிவித்தார்.

 

மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.டி.பெருமாள், விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிடவேண்டுமென கோரிக்கை விடுத்தார்.

 

அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி நிர்மல்குமார் அடுத்த மாதம் 27- ஆம் தேதி விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவேண்டுமென லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.

Next Story

பள்ளிகளில் வழங்கப்படும் தண்டனை தொடர்பான வழக்கு; பள்ளிக்கல்வித்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
The court ordered the school education department for Case related to punishment in schools

சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ‘தமிழ்நாடு முழுவதும் பள்ளிக் கல்வித்துறை கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில் குழந்தைகளை அடிப்பது போன்ற கடுமையான தண்டனை விதிப்பதை தடை செய்ய வேண்டும் என்ற தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய விதிகளை அமல்படுத்த உத்தரவிட வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டது. 

இது தொடர்பான மனு இன்று (25-04-24) சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ‘பள்ளி குழந்தைகளை அடிப்பது போன்ற கடுமையான தண்டனையைத் தடுக்கும் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய விதிகளை பள்ளிக்கல்வித்துறை அமல்படுத்த வேண்டும். ஆணைய விதிகளை அனைத்து பள்ளிகளுக்கும், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்க வேண்டும். 

விதிகளை மீறி குழந்தைகளுக்குத் தண்டனை வழங்கப்பட்டது தொடர்பாக ஏதேனும் புகார்கள் வந்தால், அதன்பேரில் அதிகாரிகள் மீது பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக விதிகளை அமல்படுத்துவதை கண்காணிக்க அனைத்து பள்ளிகளிலும், தலைமை ஆசிரியர், பெற்றோர், ஆசிரியர், மூத்த மாணவர்கள் அடங்கிய கண்காணிப்புக் குழுவை அமைக்க வேண்டும்” என்று கூறி பள்ளிக்கல்வித்துறைக்கு உத்தரவிட்டது.