Skip to main content

84 கோடி மோசடி வழக்கு: மதனிடம் 1 மணி நேரம் விசாரணை

Published on 17/09/2017 | Edited on 17/09/2017
84 கோடி மோசடி வழக்கு: மதனிடம் 1 மணி நேரம் விசாரணை

மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். சீட் வாங்கித் தருவதாக கூறி பல மாணவர்களிடம் ரூ.84 கோடியே 24 லட்சம் மோசடி செய்ததாக மதன் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த ஆண்டு மே மாதம் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் அவர் தலைமறைவானார். பின்னர் திருப்பூரில் மறைந்திருந்த அவரை கடந்த ஜனவரியில் போலீசார் கைது செய்தனர். இதே வழக்கில் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வேந்தர் பச்சமுத்துவும் கைது செய்யப்பட்டார். பின்னர் இரண்டு பேரும் ஜாமீனில் வெளிவந்தனர். இதற்கிடையே, சட்டவிரோதமாக கோடிக்கணக்கில் பணத்தை மோசடி செய்ததாக மதன் மீது அமலாக்கப்பிரிவு வழக்கு பதிவு செய்து அவரை கடந்த மே 23ம் தேதி கைது செய்தது. 

இந்த வழக்கில் கடந்த ஆகஸ்ட் 4ம் தேதி உயர்நீதிமன்றம் மதனுக்கு ஜாமீன் வழங்கியது. இந்த வழக்கின் விசாரணைக்காக மத்திய குற்றப்பிரிவு கூடுதல் உதவி கமிஷனர் ராதாகிருஷ்ணன் முன்னிலையில் மதன் நேற்று மாலை 5 மணியளவில் ஆஜரானார். அப்போது, மருத்துவ கல்லூரியில் சீட் வாங்கி தருவதாக கூறி யார், யாரிடம் பணம் பெறப்பட்டது போன்ற விவரங்கள் குறித்து மதனிடம் போலீசார் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. சுமார் 1 மணி நேரம் மதனிடம் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.

சார்ந்த செய்திகள்