விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே கிளியனூரை சேர்ந்த சஞ்சனா என்ற சிறுமி உடல்நலம் பாதுக்கப்பட்டுள்ளார். சிறுமியை பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். மருத்துவர் அவருக்கு சிகிச்சை அளித்துள்ளார்.
சிகிச்சையில் சஞ்சனாவின் உடல் கருமையாக மாறியதால் மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனையில் சிறுமியின் பெற்றோர் சேர்த்துள்ளனர். எனினும் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
காவல்துறையினரின் விசாரணையில் முதலில் சிகிச்சை அளித்த மருத்துவர் கணேசன் உப்புவேலூர் அரசு மருத்துவமனையில் ஊழியராக பணிபுரிந்துள்ளார். இவரது மருத்துவமனையில் சிறுமியை சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். மேலும் இவர் போலி மருத்துவர் என்பதும் தெரியவந்தது.
மேலும் போலி மருத்துவரின் தவறான சிகிச்சையால் தான் சிறுமி உயிரிழந்தது தெரிந்துள்ளது. போலி மருத்துவர் தலைமறைவானதால் காவல்துறையினர் அவரை தேடி வருகின்றனர். அவரது மருத்துவமனைக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.