Published on 17/11/2021 | Edited on 17/11/2021

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (17/11/2021) தலைமைச் செயலகத்தில், கால்நடை பராமரிப்புத்துறையில் பணிக்காலத்தில் உயிரிழந்த 23 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில், இளநிலை உதவியாளர், கால்நடை பராமரிப்பு உதவியாளர், பதிவறை எழுத்தர், அலுவலக உதவியாளர் மற்றும் காவலர் பணியிடங்களுக்கான பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப., கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தெ.சு.ஜவஹர் இ.ஆ.ப., கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப் பணிகள் இயக்குநர் அ.ஞானசேகரன் இ.ஆ.ப. மற்றும் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.