Published on 22/10/2022 | Edited on 22/10/2022
கன்னியாகுமரியில் கோழி வளர்க்கும் கூண்டில் 15 அடி நீளம் மலை பாம்பு இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில், பூதப்பாண்டி அருகே பார்த்திபன் என்ற நபர் வீட்டின் முன்புறம் கூண்டு ஒன்றை அமைத்து அதில் கோழிகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று அதிகாலை வழக்கம்போல் கோழிகளுக்கு உணவளிக்க கோழி கூண்டை எதேச்சையாக திறக்க வந்தபொழுது, உள்ளே மலைப்பாம்பு ஒன்று இருந்தது. அதனைக் கண்டு அதிர்ந்த அவர் இது தொடர்பாக வனத்துறைக்கு தகவல் அளித்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் கூண்டைத் திறந்து உள்ளே இருந்த மலைப்பாம்பை வெளியே எடுத்தனர். சுமார் 15 அடி நீளம் கொண்ட அந்த மலைப்பாம்பை பத்திரமாக எடுத்துச் சென்று வனப்பகுதியில் விட்டனர்.