தமிழகத்தில் இருக்கும் அரசியல் கட்சிகள், நிவாரண உதவி களத்தில் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறது. இதில், கமலின் மக்கள் நீதி மய்யம் பல இடங்களிலும் கபசுரக் குடிநீர் வழங்கி வருகின்றனர். அதனால், தனது ’ரஜினி மக்கள் மன்றம்’ மட்டும் முடங்கியிருந்தால் நல்லா இருக்காது என்று நினைத்த ரஜினி, நிவாரண உதவிகளில் நீங்களும் களமிறங்குங்கள் என்று தனது மன்ற நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறார்.
இது தொடர்பாக மாவட்ட தலைவர்கள் அனைவரையும் தானே தொடர்புகொண்டுப் பேசி, உற்சாகப்படுத்தவும் அவர் தயாராகி வருகிறார் என்று கூறுகின்றனர். அதனால் மன்ற நிர்வாகிகள், ரஜினியின் குரலுக்காக காத்திருப்பதாக சொல்கின்றனர். அதே நேரத்தில் அஜித், சிவகார்த்திகேயன் எல்லாம் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு பணம் கொடுத்திருக்கும் நிலையில், ரஜினி எப்போது, எவ்வளவு கொடுப்பார் என்கிற எதிர்பார்ப்பும் இருந்து வருகிறது.