Published on 18/04/2019 | Edited on 18/04/2019
மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தல் முடிந்த நிலையில், 7 கட்ட தேர்தலும் முடிந்த பிறகு மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி உட்பட 13 மாநிலங்களில் 97 தொகுதிகளுக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது. வாக்குப்பதிவு நடைபெறும் அனைத்து இடங்களிலும் காலை 7 மணி முதல் வாக்கு பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.