Skip to main content

''இன்றைக்குத்தான் எங்களுக்கு தீபாவளி... அதிமுக டெபாசிட் இழக்கும்...'' - எல்.கே.சுதீஷ் பேட்டி (படங்கள்)

Published on 09/03/2021 | Edited on 09/03/2021

 

 

சென்னையில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் இன்று (09.03.2021) காலை 11 மணிக்கு அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதிமுக கொடுக்க இருக்கும் குறைந்த தொகுதிகளை ஏற்பதா? அல்லது தனித்து நிற்பதா? என மாவட்டச் செயலாளர்கள் உடனான இந்த அவசர ஆலோசனைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்ட நிலையில், அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக தேமுதிக அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த முடிவால் வரும் தேர்தலில் தேமுதிக தனித்து நிற்குமா? அல்லது வேறு யாருடனேனும் கூட்டணி இருக்குமா என்பது நாளை தெரியவரும் எனக் கூறப்படுகிறது.

 

இந்தக் கூட்டத்திற்குப் பின் வெளியே வந்த தேமுதிக கட்சி துணைப்பொதுச்செயலாளர் எல்.கே.சுதீஷ், ''கேட்டத் தொகுதிகளும், எண்ணிக்கையும் தராததால் நாங்கள் அதிமுக - பாஜக கூட்டணியில் இருந்து விலகுகிறோம். தேமுதிகவிற்கு இன்றுதான் தீபாவளி. கண்டிப்பாக இந்தத் தேர்தலில் அதிமுக தமிழகத்தில் டெபாசிட் இழப்பார்கள். முக்கியமாக அங்கு இருக்கின்ற கே.பி.முனுசாமி, பாட்டாளி மக்கள் கட்சியுடைய ஸ்லீப்பிங் செல். அவர் அதிமுகவிற்கு செயல்படவில்லை'' என்றார்.

 

சுற்றியிருந்த தொண்டர்கள் தேமுதிக தலைமையின் முடிவை ஆமோதித்து உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்