Skip to main content

கமல் வீடியோவிற்கு பதில் கொடுக்கும் வகையில் ட்விட் போட்ட நடிகை காயத்ரி ரகுராம்!

Published on 16/09/2019 | Edited on 16/09/2019

நாட்டின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதற்கு கருத்து தெரிவிக்கும் வகையில் வீடியோ ஒன்றை நடிகரும், மக்கள் நீதி மய்ய கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் வெளியிட்டிருந்தார். அதில் பெரும்பாலான இந்தியர்கள் தங்கள் தேசிய கீதத்தை அவர்கள் மொழிகள் பாடுவதில்லை. வங்காளிகளைத் தவிர. இருப்பினும் அதை சந்தோஷமாக நாங்கள் பாடிக் கொண்டிருக்கிறோம், பாடிக்கொண்டிருப்போம். காரணம் அதை எழுதிய கவிஞர் எல்லா கலாச்சாரத்திற்கும் எல்லா மொழிக்கும் தேவையான இடத்தையும் மதிப்பையும் அதில் கொடுத்திருந்தார். 
 

actress



மேலும் “இந்தியா என்பது  ஒரு அற்புத விருந்து, அதை கூடி உண்போம். திணிக்க நினைத்தால் குமட்டிவிடும்” என்று கூறியிருந்தார். இதற்கு பதில்  கொடுப்பது போல் நடிகையும், அரசியல்வாதியுமான காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அதில், வாழை இலை தேவை விருந்து சாப்பிட; நம்மை தாங்கிப்பிடிக்க, ஒன்றிணைக்க ஒரு மொழியை கற்க வேண்டும். அதற்காக நம் மொழியை, கலாச்சாரத்தை விட்டுவிட வேண்டுமென்பதில்லை என்று கூறியுள்ளார். மேலும் “தேசிய கொடி, பறவை, பாடல், விலங்கு, பழம் என அனைத்தும் இருக்கும்போது அனைவரையும் ஒன்றிணைக்கும் பொதுவான மொழி ஏன் இருக்கக்கூடாது?” என்றும் ட்விட் போட்டுள்ளார். 
 

 

சார்ந்த செய்திகள்