Published on 01/08/2022 | Edited on 01/08/2022

கர்நாடகா மாநிலம், பெங்களூரில் பெண்களை நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்த தம்பதி உள்பட நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கணவரை இழந்த பெண்கள் மற்றும் விவாகரத்தான பெண்களைக் குறி வைத்து இந்த சம்பவம் நடைபெற்று இருப்பது காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அந்த பெண்களுக்கு வேலை வாய்ப்பு வாங்கித் தருவதாகக் கூறி, மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளனர். கைதானவர்களிடம் இருந்து ரூபாய் 12 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள், கார் மற்றும் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம், அம்மாநில மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.