Skip to main content

71 லட்சம் இந்தியப் பயனர்களுக்குத் தடை; அதிரடி நடவடிக்கை எடுத்த வாட்ஸ்அப்!

Published on 03/06/2024 | Edited on 03/06/2024
WhatsApp banned 71 lakh Indian users!

உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் உபயோகிக்கும் செயலி தான் வாட்ஸ் அப். இந்த செயலி மூலம், தகவல்களை பரிமாறவும், இணைய சேவை மூலம் எந்தவித கட்டணமுமின்றி வீடியோ கால், ஆடியோ கால் போன்றவற்றை பயன்படுத்தவும் முடியும். மேலும், புகைப்படங்கள், வீடியோக்கள், ஸ்டிக்கர்கள் என அனைத்து விதமான பரிமாற்றங்களையும் இந்த செயலி மூலம் அனுப்பக்கூடிய வசதிகள் உண்டு. இந்த செயலியை உபயோகிக்காத மக்கள் மிகவும் சொற்பமாக தான் இருக்க முடியும் என்றுதான் கூற வேண்டும். இதற்கிடையில் வாட்ஸ் அப் பயனர்களின் வசதிகளுக்கு ஏற்றவாறு வாட்ஸ் அப் நிறுவனம் அவ்வப்போது புதிய அப்டேட்களை அறிமுகப்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், ஒவ்வொரு மாதமும், ஸ்கேமர்கள் அல்லது தளத்தின் தனியுரிமைக் கொள்கைகளை மீறுவதாகக் கூறப்படும் லட்சக்கணக்கான இந்திய பயனர்களை வாட்ஸ்அப் நிறுவனம் தடை செய்து வருகிறது. அதன்படி, கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ஏப்ரல் 30ஆம் தேதி வரையிலான இந்திய மாதாந்திர அறிக்கையை வாட்ஸ்அப் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், ‘பயணர்கள் தொடர்ந்து விதிகளை மீறுவதாலும், தடைகளை தொடர்ந்து செயல்படுத்துவதாலும் கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் 71 லட்சம் இந்திய கணக்குகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இவற்றில் 1,302,000 கணக்குகள் பயனர்களிடமிருந்து எந்த புகாரும் வருவதற்கு முன்பே தடை செய்யப்பட்டுள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது.  

வாட்ஸ்அப் நிறுவனம், அதன் பயனர்களுக்கு பாதுகாப்பான சூழலை பராமரிக்க பயனர் கணக்குகளை தடை செய்கிறது. ஸ்பேம், மோசடிகள், தவறான தகவல், உள்ளூர் சட்டங்களை மீறும் கணக்குகள் போன்ற காரணங்களுக்காக பயணர்களின் கணக்குகளை வாட்ஸ்அப் நிறுவனம் தடை நடவடிக்கை எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்